தமிழர் திருநாள்

உலகத் தமிழ் வளர்ச்சி கழகம் ஆண்டுதோறும் பல தமிழ்ச் சார்ந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதனை செவ்வனே வழிநடத்தி வருகிறது. அந்த வகையில் தமிழர் திருநாள் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் ஒரு நிகழ்ச்சியாக அமைகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொள்ளும் இந்நிகழ்ச்சி பலரின் மத்தியில் பேசப்படும் ஒன்றாக அமைவது குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் கலை கலாச்சாரத்தைப் பரைச்சாற்றும் வகையில் இந்நிகழ்ச்சி வழிநடத்தப்பட்டும் வருகிறது. உலகத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் தமிழ் அறப்பணிகள் மென்மேலும் வளரும் என்பது வெள்ளிடைமலையாகும்.









