
மலேசியத் தமிழர்கள் தங்களுடைய மரபுகளையும், விழுமியங்களையும், பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டும். இத்தேவையை நிறைவேற்ற அவர்கள் தங்கள் மொழி, கலை, இலக்கியம் இவற்றோடு நீங்காத தொடர்புடன் வாழ வேண்டும். தமிழ் மக்களின் பண்பாட்டுத் தேவைகள் காக்கப்படும் வகையில் உலகத் தமிழ்க் கல்விக்கழகம் உருவாக்கப்பட்டிருக்கிறது உலகத் தமிழ் அகடாமி சென். பெர். நிறுவனம் ஒன்றால் வழி நடத்தப்பட்டு, (மலேசிய) தமிழ் வளர்ச்சிக் கழகம் துணையுடன் முழுநேர இயக்குநர் பொறுப்பில் செயற்பட்டு வருகின்றது
Malaysian Tamils in order to preserve their cultural identity and observe their traditions and values, need to maintain familiarity with Tamil and be knowledgeable about their heritage. Malaysian Tamils must preserve their traditions, values and culture. To fulfill this need they have to live in constant contact with their language, art and literature. The World Tamil Academy has been set up to cater to the cultural needs of the Tamil people. (Malaysia) Tamil Valarchi Kazhakam Corporation with full support as a Director.
குறிக்கோள்/Mission
தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு தொடர்பான பாடத் திட்டங்களை வகுத்தல்:
கேள்வியறிவுக்காகவோ அல்லது சான்றிதழ், பட்டயம், பட்டம் பெறுவதற்காகவோ கற்போருக்கு இப்பாடங்களைக் கற்க வாய்ப்பளித்தல்: உரிய நியமங்களை நிறைவு செய்தோருக்கு, அவர்கள் கற்ற பாடங்களின் தகுதிக்கு ஏற்ப தமிழ் நாடு, தமிழ் இணையக் கல்விக் கழகம் வழியாகச் சான்றிதழ்/பட்டயம்/பட்டம் வழங்க ஏற்பாடு செய்தல்.
To initiate and continue necessary measures to co-ordinate and pool together knowledge resources developed in Tamil in different parts of the world, to ensure wider dissemination. To offer academic programs in Tamil Language, literature and culture for audit or credit and to award appropriate Certificate/Diploma/Degree through TAMIL VIRTUAL ACADEMY on completion of prescribed requirements.
பெயர் விளக்கம்
தமிழ்வளர்ச்சிக் கழகம்
PERSATUAN TAMIL VALARCHI K.L. & SEL.(PPP-32-14-05052016)
செம்மொழிகளுள் ஒன்றாகிய தமிழ்மொழி, எக்காலத்திற்கும் உகந்த மொழியாக வளர்ந்துள்ளது. இதே தன்மையில், எதிர்காலத்திலும் தொடர்ந்து வளர்ந்து, சிறப்பும் செழிப்பும் நிறைந்த மொழியாகத் திகழ வேண்டும் என்பதனையும் மலேசியாவில் தமிழ்மொழியின் இந்த நீடித்த வளர்ச்சியைக் குறிக்கும் வகையில் இப்பெயர் இவ்வியக்கத்திற்குச் சூட்டப்பட்டுள்ளது.
நோக்கம்
மலேசியாவில் தமிழ்மொழியை வாழும் மொழியாகவும் பயன்பாட்டு மொழியாகவும் நிலைபெறச் செய்வதோடு, அனைத்து வயதினரையும் தமிழால் ஒன்றிணைத்து, மலேசியாவில் தமிழ்மொழியை ஓங்கச் செய்து தம் வரலாற்று மதிப்புகளை அறிந்தவர்களாகத் தமிழர்களை உருவாக்குவதே தமிழ்வளர்ச்சி இயக்கத்தில் தலையாய நோக்கமாகும்.
செயல்முறை
முறையான பாடத்திட்டத்தின் வழி, போதனாமுறை மூலமும் மாணவர்கள் மட்டுமல்லாது பொதுமக்கள் குறிப்பாக இல்லத்தரசிகள் மொழி மட்டுமல்லாது இலக்கியத்தின் அடிப்படை- நம் தமிழர் வரலாறு தெரிந்தவர்களாக தெரியவைத்து, தமிழியல் பயின்ற பட்டதாரிகளாக உருவாக கழகம் சிறந்த சேவைகளை ஆண்டு முழுவதும் வழங்குகிறது. அதோடு நம் பண்பாட்டு இலக்கியக் கூறுகளைக் காக்கும் நோக்கத்தில் ஆண்டுக்கு ஒருமுறை தமிழை திருநாள் விழாவைச் சிறப்பாக கொண்டாடி வருகிறது.
சின்னம்

தமிழ் வளர்ச்சி இயக்கத்தின் சின்னம் – தமிழ்மொழி இயல்- இசை- நாடகம் எனும் முத்தமிழ் பெருமையைப் பெற்றது என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஆடல், இசை கருவி, நூல் போன்றவைகளுடன் “ஒற்றுமையே பலம்” என்ற சொல்; தமிழர்கள் தங்களுக்குள் ஒற்றுமையைப் பலப்படுத்த வேண்டும் என்ற நினைவூட்டலை வழங்கும் வகையில் இச்சின்னம் அமையப் பெற்றுள்ளது.
தமிழ் வளர்ச்சி கழகத்தின் செயல்பாடுகள்
- மாந்தர்கள் வாழ்வியல் கல்வியாகத் தமிழ்மொழியைக் கற்கும் வழிமுறைகளை உருவாக்குதல்.
- தேசிய மொழி பயின்ற மாணவர்கள் தமிழ்க் கற்கும் வகையில் தமிழ் வகுப்புகள் நடத்துதல்.
- பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ் இலக்கணம் இலக்கியம், தமிழின் தொன்மை, மேன்மைகளை உணர்த்த தமிழ்க் கல்வி கற்ற குமுகாயமாக உருவாக்குதல்.
- மொழி – இனம் – சமயம் ஆகிய முக்கூறுகளில் சிந்தனை தெளிவுப் பெற்ற உயர்ந்த இளம் தமிழ்த் தலைமுறையை உருவாக்குதல்.
- குமுகாய நன்னெறியைப் பேண திருக்குறள் வகுப்புகளை நடத்துதல்.
- திருக்குறள் நெறியினை வாழ்வியலாகக் கொண்ட தமிழர்களை உருவாக்குதல்.
- தமிழரிடையே இல்லாதது ஒற்றுமை. தமிழர்களிடையே ஒற்றுமையை மேம்படுத்தி தமிழர் ஒரே குமுகாயமாகச் செயல்படும் சிந்தனையை வளப்படுத்துதல்.
- தமிழ் மரபுவழிச் சிந்தனையைப் போற்றி வாழும் வழிவகைகளைத் தமிழர்களிடையே பரப்புதல்.
- இளங்கலை தமிழியல் பட்டக் கல்வியை ஒரு கருவியாக மேற்கொண்டு தமிழர்களை ஆரிய மாயையிலிருந்து விடுவிக்கும் வகையில் பாடங்களை நடத்துவதிலேயே முகாமையான கவனத்தைச் செலுத்துதல்.
- தமிழ் வளர்ச்சிக் கழகம், வருடத்திற்கு இரு இதழ்கள் என்று தொடங்கி, காலச் சூழ்நிலைக்கேற்ப மாத இதழாக வெளியீடு செய்தல்.
- மொழி மீட்பு, பண்பாட்டு மீட்பு, வரலாற்று மீட்பு, ஆகியவற்றுக்கு உறுதுணையாதல். தூயத் தமிழ் வளர்ச்சிக்கு வித்திடுதல்.
- தைமாதம் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று இன்னும் தமிழர்களே ஏற்காத நிலை இருப்பதால் இந்த அவ